சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து வெடித்து தீ விபத்து.. குடிசை வீடு எரிந்து நாசம்..!

0 1816
சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து வெடித்து தீ விபத்து.. குடிசை வீடு எரிந்து நாசம்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்துச் சிதறி தீப்பிடித்ததில் குடிசை வீடு எரிந்து நாசமானது.

ஆரணியில் ஜீவா என்பவர் தனது மகள் அபிநயாவுடன் குடிசையில் வசித்து வந்த நிலையில், பொங்கலுக்காக  தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அவருடைய மகள் அபிநயா மட்டும் வீட்டில் இருந்தார்.

இந்நிலையில் வீட்டில் இருந்த  சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்ததை கண்டு அபிநயா வெளியே ஓடிவரவே, வீடு முழுவதும் தீமளமளவென பிடித்து நாசமானது. வெளியே ஓடிவந்ததால்,  அபிநயா காயமின்றி உயிர் தப்பினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments