ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலைவாழ் பெண் மர்மச்சாவு.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!

0 2862
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலைவாழ் பெண் மர்மச்சாவு.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மலைவாழ் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தில், அந்த பெண்ணை அவருடைய கணவரே கொலை செய்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்திகோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த வனராஜ், அதே பகுதியை சேர்ந்த  உமா என்பவரை 2வது திருமணம் செய்து  வாழ்ந்து வந்தார். வீட்டின் மோட்டார் அறைக்கு சென்று இருவரும் இரவில் தூங்கிய நிலையில் காலையில்  உமா காயமடைந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்து வனராஜை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்த போது, மதுபோதையில் உமாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.இதையடுத்து வனராஜை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments