நேபாள விமான விபத்தில் பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு.. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!

நேபாள விமான விபத்தில் பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு.. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!
நேபாளத்தில் விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ள நிலையில், அதில் 5 பேர் இந்தியர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த 5 பேரில், 4 பேர் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர்கள். விபத்துக்கு முன்பு விமான பயணத்தை முகநூலில் நேரலை செய்துள்ளனர். அப்போது விமானம் விபத்தில் சிக்குவதும், தீப்பிழம்பாகும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடிஇரங்கல் தெரிவித்துள்ளார். இதுவரை 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இரவு நேரம் என்பதால் மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் காலையில் எஞ்சிய உடல்களைத் தேடும் பணி நடைபெறுகிறது.
Comments