தண்ணீரில் விளையாடியபோது பக்கெட்டிற்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு..!

சென்னை விருகம்பாக்கத்தில் பக்கெட்டிற்குள் தவறிவிழுந்த குழந்தை, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியாபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளரான அருண்குமார் என்பவரின் ஒரு வயது மகனான இளமாறன், கழிவறை படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த பக்கெட்டிலிருந்த தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தபோது தவறி பக்கெட்டிற்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.
பக்கெட்டிற்குள் குழந்தை மயங்கிகிடப்பதை கவனித்த தாயார், மருத்துவமனைக்கு அழைத்துசென்றபோது குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Comments