நள்ளிரவில் ரூ.50,000 மதிப்பிலான 160 குடிநீர் குழாய்களைத் திருடி சென்ற திருடன் கைது ...!

0 1436

விழுப்புரம் மாவட்டம் தேவனூரில் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் போடப்பட்ட குடிநீர் குழாய்களை திருடிச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

அண்மையில் அங்கு ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான 160 குடிநீர் குழாய்கள் திருடுபோயின.

சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தபோது, நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், ஒவ்வொரு வீடாக சென்று குழாயை திருடியது தெரியவந்தது.

இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து பல்வேறு திருட்டு வழக்குகளில் தேடப்பட்டுவந்த அன்பரசன் என்பவனை கைதுசெய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவனது கூட்டாளி ரெனால்ஸை தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments