ஜம்மு காஷ்மீரில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பனிச்சரிவுகள் ஏற்படும் என பேரிடர் மீட்புத்துறை எச்சரிக்கை!

ஜம்மு காஷ்மீரில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பனிச்சரிவு ஏற்படலாம் என்று பேரிடர் மீட்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்ட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து சார்பல் மற்றும் கந்தர்பால் ஆகிய இரண்டு மலைப்பிரதேசங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது.
கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டுகட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் பல இடங்களில் பனிச்சரிவு ஏற்படலாம் என்பதால் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Comments