இமாச்சலபிரதேசத்தில் கடும் பனிப்பொழிவால் வீடுகளை சூழ்ந்த வெண்பனி...!

0 1012

இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் பல இடங்களில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

இமாச்சலபிரதேசத்தில் பனிப்பொழிவு காரணமாக, சிம்லா, மணாலி உள்பட 4 பகுதிகளுக்கு செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

அதிக பனிப்பொழிவால், மலை முகடுகள், வீடுகள் உள்ளிட்டவற்றை வெண்பனி மூடியது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திலும், அதிகளவு பனிப்பொழிவு காணப்பட்டதால், வெண்பட்டு போர்த்தியது போல் பனி படர்ந்து காணப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின், ரம்பன் பகுதியில் பனிப்பொழிவு அதிகரித்த நிலையில், சாலைகளை மூடியிருந்த பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments