சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் வட மாநில மூன்று இளைஞர்கள் படுகாயம்..!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த வடமாநில தொழிலாளிகள் மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கீழ்ச்செல்லையாபுரத்தை சேர்ந்த குருநாதனின் பட்டாசு ஆலைக்கு உரிமம் உள்ள நிலையில், விதிகளை மீறி ஃபேன்சி ரக வெடிகளை தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது.
பட்டாசு தயாரிக்கும் போது ரசாயன பொருட்களின் உராய்வினால் ஏற்பட்ட விபத்தில், ஆஜி, சந்தீப்குமார், வினோத் ராம்பால் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments