அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளை தாக்கிய புயல் - 9 பேர் பலி

அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களை தாக்கிய புயல் பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை மிசிசிப்பி முதல் ஜார்ஜியா வரையிலான மாகாணங்களை அடுத்தடுத்து புயல்கள் தாக்கின. இதில் பெரும் சேதத்தை சந்தித்த அலபாமா மாகாணத்தில் பல வீடுகள் சேதமடைந்ததோடு, மரங்கள் வேரோடு சாய்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அலபாமா மாகாணத்தின் சில பகுதிகளில் அவசரநிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட அம்மாகாணா ஆளுநர் கே ஐவி, மீட்புப் பணிகளை மேற்கொள்ள முன்வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
Comments