அரசு வேலை வாங்கி தருவதாக ஊழியரிடம் 16 லட்சம் ரூபாய் மோசடி... முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் கைது

0 1697

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த விழுப்புரம் நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் சாலாமேடு  பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேலு. திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் பணியாற்றியபோது இவருக்கும்  அப்துல்ஜப்பார் என்பவருக்கும்  பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அப்துல் ஜப்பார் தனது நண்பர் முகமது ஷெரீப் இடம் எடுத்து கூறி  பழனிவேலு  மகள்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக  உறுதி அளித்துள்ளார்.

இதை நம்பிய பழனிவேலு, முகமதுஷெரீப், அப்துல்ஜப்பார் ஆகியோரிடம் 16 லட்சம் ரூபாயை . கொடுத்துள்ளார். ஆனால் வேலை ஏதும் வாங்கித் தராத நிலையில், பழனிவேலு அளித்த புகாரின்  பேரில் முகமதுஷெரீப்பை போலீசார் கைது செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments