அனைத்து நாடுகளுக்கும் எந்தத் தடையுமின்றி மருந்துகள் கிடைக்க வேண்டும் - பிரதமர் மோடி

0 1111

உலகமயமாக்கல் மனித நேயத்தை முன்னிறுத்துவதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Voice of Global South இரண்டு நாள் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் மருந்துகள் விநியோகம் அனைத்து நாடுகளுக்கும் எந்தத் தடையுமின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கூறினார்.

கடந்த மூன்று ஆண்டுகள் வளரும் நாடுகளுக்கு பொருளாதார நிலை பெரும் சவாலாக இருந்ததாகவும் மோடி தெரிவித்துள்ளார். கோவிட் பரவல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உரம் மற்றும் உணவுப் பொருள் விலை உயர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments