கோவைக்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் உடல் உறுப்புகளுக்குள் மறைத்து கடத்தப்பட்ட 3.54 கிலோ தங்கம் பறிமுதல்

0 1687

கோவைக்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் உடல் உறுப்புகளுக்குள் மறைத்து வைத்து கடத்தப்பட்ட  மூன்றரைக் கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சவுதியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ஆறு பயணிகளிடம் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் அவர்களின் உடல் உறுப்புகளுக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட சுமார் 3.54 கிலோ எடையிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு 2 கோடியே 5 லட்சம் ரூபாய் ஆகும். இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments