ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வெடிகுண்டு என மிரட்டல் விடுத்த நபர் கைது

0 1624

டெல்லியில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் டிக்கட் ஏஜன்ட்டாக பணிபுரியும் அபினவ் பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமது நண்பர்களுக்கு உதவுவதற்காக அவர் வகுத்த விபரீதத் திட்டம் குறித்து விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராகேஷ் மற்றும் குணால் ஆகிய இரண்டு நண்பர்கள் அண்மையில் மணாலி போன போது இரண்டு பெண்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டனர் என்றும், அந்த இரண்டு பெண்களும் ஸ்பைஸ் ஜெட் விமானம்மூலம் புனே செல்ல இருந்தனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தோழிகளுடன் கூடுதலாக நேரத்தை செலவிட விரும்பிய இரண்டு நண்பர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு விமானத்தைத் தாமதப்படுத்த வெடிகுண்டு புரளியைக் கிளப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.விமானம் தாமதமானதை அறிந்து தோழிகளுடன் கொண்டாடி மகிழ்ந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments