கல்லூரிகளில் களைகட்டிய பொங்கல் விழா.. பொங்கல் வைத்து மாணவ-மாணவிகள் நடனமாடி கொண்டாட்டம்..!

0 1295

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகளில், மாணவ-மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.

அதேபோல், திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில், முளைப்பாரி எடுத்து சென்ற மாணவிகள், பொங்கல் விழாவில் சிலம்பம் சுற்றுதல், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.


நாகை மாவட்டத்தில், சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில், பாரம்பரிய உடையில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜை, மாணவர்கள் சிலம்பம் சுற்றி வரவேற்றனர். மற்றொரு தனியார் கல்லூரியிலும், பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியது.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிசந்தை பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில், பொங்கல் விழா மாணவிகள் சமத்துவ பொங்கலிட்டு நடனமாடி கொண்டாடினர்.

இதேபோல், தஞ்சாவூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளிலும், சமத்துவ பொங்கல் வைத்து மாணவ - மாணவிகள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments