''சேது சமுத்திர திட்டம் கொண்டுவரப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ''-அண்ணாமலை

0 5857

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் திட்டிமிட்டிருந்தபடி சேது சமுத்திர திட்டம் கொண்டுவரப்பட்டால் மீனவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நெல்லையில் இது குறித்து பேட்டியளித்த அவர், 20 ஆயிரம் டன் எடைகொண்ட கப்பலால் கூட திட்டமிட்ட வழியே வர முடியாது என்ற சூழலில் எவ்வாறு பெரியளவிலான கப்பல்கள் அவ்வழியே வர முடியும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அச்சயம் கேள்வியெழுப்பி, அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததாக அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.

சேது சமுத்திர திட்டத்தின் மூலம் பயனடையப்போவது டி.ஆர். பாலு மற்றும் கனிமொழியின் நிறுவன கப்பல்கள் மட்டும் தான், மீனவர்கள் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு திட்டம் கொண்டு வந்தால் ஆண்டிற்கு 12% வருமானம் வர வேண்டும், ஆனால், சேதுசமுத்திர திட்டத்தால் அவ்வாறு வருவாய் கிடைக்காது என ஆர்.கே.பச்சோரி குழு மேற்கோள்காட்டியிருந்ததாகவும் அண்ணாமலை கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments