அழிவின் விளிம்பில் உள்ள 43 பச்சைக் கடல் ஆமைகள் வேட்டையாடுபவர்களிடம் இருந்து மீட்ட கடற்படையினர்..!

0 882

இந்தோனேசியாவின் பாலி தீவில், அழிவின் விளிம்பில் உள்ள 43 பச்சை கடல் ஆமைகளை, வேட்டையாடுபவர்களிடம் இருந்து கடற்படை அதிகாரிகள், உயிருடன் மீட்டனர்.

கிலிமானுக் கடற்பகுதியில் கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததைக் கண்ட வேட்டையாடுபவர்கள், ஆமைகளை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

ஆமைகளை மீட்ட கடற்படையினர் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில், அவை மீண்டும் கடலில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்டையாடுதல், மீன்பிடி சாதனங்களில் சிக்குவது போன்ற காரணங்களால், கடந்த சில ஆண்டுகளாக பச்சை கடல் ஆமைகளின் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments