ரயில் நிலையத்தை குற்றாலமாக்கி குளித்து குதூகலித்த வட மாநிலத்தவர்..! அடுத்த வாரம் 500 பேமிலி வருதாம்..!

0 5740

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் சவரில் குளிப்பது போல ரெயில்வே குடி நீரில் குடும்பம் குடும்பமாய் குளித்து துணிதுவைத்து மகிழும் வட மாநில பயணிகளின் வீடியோ வெளியாகி உள்ளது...

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து புதுச்சேரிக்கு அரவிந்தோ சூப்பர் ஃபாஸ்ட் அதிவிரைவு ரயில் வாரம் ஒரு முறை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில், வட மாநில தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாய் தமிழகம் வருகின்றனர். 

இந்த ரயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்திறங்கிய வட மாநில குடும்பத்தவர்கள் தமது உடைமைகளை எடுத்துக்கொண்டு, ரயில் நிலையத்தை விட்டு வெளியேறாமல், ரயில் நிலையத்தை தங்குமிடமாக மாற்றினர்.

ரயில் பெட்டிகளுக்கு குடிநீர் ஏற்றும் பெரிய அளவிலான குழாய்களை திறந்து, பட்டப்பகலில் பலபேர் முன்னிலையில் ஏதோ குற்றால அருவியில் குளிப்பதைப்போல, அரை நிர்வாணக் கோலத்தில் ஆனந்த குளியலிட்டு, அட்டகாசம் செய்தனர்

குளித்ததோடு, தாங்கள் துணிகளையும் துவைத்து ரெயில் நிலையத்தில் கயிறு கட்டி காயப்போட்டனர். இதனை கண்டு மற்ற பயணிகள் திகைப்படைந்தனர்.

சத்தம் போட்டாலும் கேட்கவில்லை என்பதால் ரயில் நிலைய அதிகாரிகள் இதனை கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகின்றது. தமிழகத்தில் வேலைக்கு நல்ல கூலி கிடைப்பதாகவும், தொடர்ந்து வேலை இருப்பதால் அடுத்த வாரம் வரும் ரெயிலில் 500 குடும்பங்கள் வரை தமிழகம் வருவதாகவும் அங்கிருந்த வட மாநிலத்தவர்கள் கூறிச்சென்றது குறிப்பிடதக்கது. இந்த ரெயில் நிலைய குளியல் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments