உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

கங்கை உள்ளிட்ட 27 நதிகள் வழியாக 3 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலான எம்.வி கங்கா விலாஸ் கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து அசாமின் திப்ருகார் வழியாக வங்க தேசத்திற்கு எம்.வி கங்கா விலாஸ் கப்பல் செல்கிறது. இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள 27 நதிகளை இக்கப்பல் கடந்து செல்ல உள்ளது.
62 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட இந்த சொகுசுக் கப்பலில் 3 தளங்கள் உள்ளன. மொத்தம் உள்ள 18 அறைகளில் 36 பயணிகள் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments