கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி தத்தளித்த 2 மாணவர்கள் மீட்பு..!

0 1005

புதுச்சேரியில், ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்ட டெல்லி ஐஐடி மாணவர்களை, தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க புதுச்சேரி சென்ற டெல்லி ஐஐடி மாணவ-மாணவிகளில் சிலர், கடற்கரையை சுற்றிப்பார்க்க சென்று கடலில் குளித்துள்ளனர். அப்போது, இரண்டு மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டனர்.

இதனை கரையில் இருந்து பார்த்த மாணவர்கள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர், அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெரியகடை காவலர்கள் சக்திவேல், முருகன், மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஒரு நபர்  ஆகியோர் மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர், இது குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்து கடலில் தத்தளித்த 2 மாணவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததை அடுத்து,  அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments