ராட்சத மாமனை கத்தியால் கதையை முடித்த வினோதினி..! கொலையும் செய்வாள்..
சென்னை விருகம்பாக்கத்தில் தினமும் குடித்து விட்டு வந்து அட்டகாசம் செய்த கணவனுக்கு சூடு வைத்தும் கேட்காததால், குத்திக் கொலை செய்துவிட்டு தவறி விழுந்து விட்டதாக நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை விருகம்பாக்கம், மதியழகன் நகர், கே.கே. சாலை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி வினோதினி, கணவர் முறையாக வேலைக்கு செல்லாததால், வீடுகளுக்கு சமையல் செய்து கொடுக்கும் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று தனது கணவர் குடிபோதையில் தவறி விழுந்து விட்டதால் காயம் ஏற்பட்டதாகக் கூறி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வேல்முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடலில் கத்திக் குத்து காயம் இருந்ததால் விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற விருகம்பாக்கம் போலீசார், வேல்முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அவரது மனைவி வினோதினியிடம் நடத்திய விசாரணையில் வேல்முருகன் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.
வேல்முருகன் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று குடிபோதையில் சாக்கடையில் விழுந்து வீட்டிற்கு வந்த வேல்முருகனை குளிக்கச் செய்து வீட்டில் அமர வைத்திருந்தார்.
போதை தெளிந்ததும் மீண்டும் குடித்துவிட்டு வந்து வீட்டை அசுத்தம் செய்ததால் ஆத்திரமடைந்த வினோதினி கத்தியை நெருப்பில் காட்டி எடுத்து வந்து வேல்முருகனின் உடலில் சூடு வைத்துள்ளார்.
வலியால் துடித்த வேல்முருகன் மனைவியை தாக்கி உள்ளார். ஆத்திரமடைந்த வினோதினி கைதியில் சூடாக இருந்த கத்தியால் இரண்டு முறை குத்தியதில் காயத்துடன் வேல்முருகன் மயங்கி உள்ளார்.
இதனால் வீட்டிலேயே வைத்து மயங்கி விழுந்த கணவருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்ற முயன்றுள்ளார். சுயநினைவு இன்றி இருந்த வேல்முருகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது கொலை செய்யப்பட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Comments