பச்சையப்பன் கல்லூரி பொங்கல் விழாவில் மாணவர்கள் மோதல்.. 3 பேர் கைது..!

0 1093

சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தின் போது மாணவர்களின் இரு பிரிவினர் மோதிக்கொண்ட சம்பவத்தில் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் பொங்கல் தின கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது திருத்தணி மற்றும் பூந்தமல்லி பஸ் ரூட் மாணவர்களிடையே திடீர் என கை கலப்பு ஏற்பட்டது.

இரு தரப்பினரும் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இரண்டு மாணவர்கள் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த கீழ்பாக்கம் போலீசார் வருவதை கண்ட மாணவர்கள் சிதறி ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டதில் இருவர் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர், ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார்.தலைமறைவான மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments