விபத்தில் சிக்கிக் கொண்டதாக 108 ஆம்புலன்ஸை அழைத்த கணவன்.. போலீஸில் பிடித்துக் கொடுத்து விடுவதாகக் கூறி கணவனை ஓட விட்ட மனைவி..!

0 2364

நாமக்கல்லில், குடிபோதையில் 108 ஆம்புலன்ஸை அழைத்து தகராறில் ஈடுபட்ட தொழிலாளியை அவரது மனைவி போலீஸாரை அழைப்பதாகக் கூறி பயமுறுத்தி ஓட விட்டார்.

சிட்கோ காலனியைச் சேர்ந்த முருகேசன், தான் லெட்சுமி நகரில் சாலை விபத்தில் அடிபட்டு விட்டதாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார்.

இதனயைடுத்து, அங்கு வந்த மருத்துவ பணியாளர்கள் முருகேசனை சோதித்த போது அவர் மதுபோதையில், தவறான தகவல் அளித்ததை தெரிந்துக் கொண்டனர்.

இந்நிலையில், தகவலறிந்து அங்கு கையில் கட்டையுடன் வந்த முருகேசனின் மனைவி, ஆம்புலன்ஸ் பணியாளர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு முருகேசனை அங்கிருந்து செல்லுமாறு கூறினார்.

ஆனாலும், தொடர்ந்து முருகேசன் தகராறு செய்யவே, போலீஸில் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று கூறியதும் அந்த இடத்திலிருந்து ஆளை விட்டால் போதுமடா சாமி என முருகேசன் நழுவிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments