கோயில்களில் தனி நபருக்கு முதல் மரியாதை அளிக்கக் கூடாது - நீதிமன்றம் உத்தரவு

0 1121

சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டை கிராமத்தில் உள்ள சண்டிவீரன் சுவாமி கோவில் மற்றும் பெரியகோட்டை முத்தையனார் கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக் கூடாதென மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

அனைத்து சமூகத்தினரும் இணைந்து கொண்டாடி வரும் பொங்கல் விழாவில் குறிப்பிட்ட ஒருவர் மட்டும் மரியாதையை கேட்டு பெற்று வருவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார்.

கோவிலுக்குள் முதல் மரியாதை வழங்குவது, தலைப்பாகை அணிவது, குடை பிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் ஒரு நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பு இந்த வழக்கிற்கும் பொருந்தும் என நீதிபதி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments