லண்டனுக்கு கூடுதலாக 17 வாராந்திர விமானங்கள் - ஏர் இந்தியா

0 1095

இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து லண்டனுக்கு, கூடுதலாக 17 வாராந்திர விமானங்களை இயக்க உள்ளதாக, ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

அமிர்தசரர், அகமதாபாத், கோவா, கொச்சி நகரங்களிலிருந்து வாரத்திற்கு 3 முறை லண்டனின் ஹேட்விக் விமான நிலையத்திற்கு மொத்தம் 12 விமானங்கள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லியிலிருந்து ஹீத்ரோவிற்கு ஏற்கனவே இயக்கி வரும் சேவையை 14லிருந்து 17 ஆகவும், மும்பையிலிருந்து இயக்கும் சேவையை 12லிருந்து 14 ஆகவும் உயர்த்துவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments