இரவு நேரத்தில் ஆயுதங்களுடன் வீடுகளின் கதவுகளை தட்டி சுற்றித்திரிந்த 6 பேர் கைது..!

0 1358

கோயமுத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே, இரவு நேரத்தில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த சிறுவர்கள் 3 பேர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சீபா நகர் பகுதிக்கு கடந்த 10-ம் தேதி அதிகாலை பயங்கர ஆயுதங்களுடன் சென்ற 6 பேர், பூட்டியிருக்கும் வீடு ஒன்றின் கதவை தட்டியுள்ளனர்.

கதவு திறக்காததையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியைக்கொண்டு 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

6 பேரும், ஈரோடு சத்தியமங்கலத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments