ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள பொம்மைக்கடையில் ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத 817 பொம்மைகளை பறிமுதல்..!

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள பொம்மைக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பி.ஐ.எஸ் அதிகாரிகள், ஐ.எஸ்.ஐ தரக்குறியீடு இல்லாத 817 பொம்மைகளை பறிமுதல் செய்தனர்.
அரசால் வெளியிடப்பட்ட பொம்மைகள் தரக்கட்டுப்பாடு ஆணையின்படி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இறக்குமதி செய்யப்பட்ட அல்லது விற்பனைக்கு காட்டப்படும் அனைத்து பொம்மைகளும், BIS எனப்படும் இந்திய தர நிர்ணய அமைப்பால், கட்டாயமாக தரச் சான்றளிக்கப்பட்டு BIS ஸ்டாண்டர்ட் மார்க் பெற்றிருக்க வேண்டும்.
இந்நிலையில், ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள பொம்மைக்கடையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாமல் பொம்மைகள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, 337 எலக்ட்ரிக் பொம்மைகள் உட்பட 817 பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Comments