"கட் அவுட் மீது ஏறுவது போன்ற ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம்" - டிஜிபி சைலேந்திர பாபு

0 1139

இளைஞர்கள் வாகனங்கள் மீதும், கட் அவுட்டுகள் மீதும் ஏறுவது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாமென தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு கேட்டுக் கொண்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் நடைபெற்ற அகில இந்திய காவல் துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி, சென்னையில் இளைஞர் லாரியில் ஏறி நடனமாடி கீழே விழுந்து உயிரிழந்ததால், அவரது குடும்பமே சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக வேதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments