ஆசிரியர் முன்னிலையிலேயே பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் மாணவர்கள்..!

தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களை வேலையில் ஈடுபடுத்தக் கூடாதென பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ள நிலையில், அதை மீறும் வகையில், பள்ளி வளாகத்தை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ய வைத்த காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், சு.பில்ராம்பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து, சேகரித்த குப்பைகளை எரிக்கும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
ஆசிரியர் முன்னிலையிலேயே மாணவர்கள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த நிலையில், மாணவர்கள் தாமாக வந்து இதை செய்தனர் என்று தலைமை ஆசிரியை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Comments