மெக்சிகோவில் மெட்ரோ ரயிலில் திடீர் தீ விபத்து.. நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்..!

0 903

மெக்சிகோவில் உள்ள பரபரப்பான பொலிடெக்னிகோ ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயிலின் ஒரு பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்தது.

தலைநகர் மெக்சிகோ சிட்டியில் பயணிகளுடன் ரயில் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு பெட்டியில் தீப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.

ரயிலில் இருந்து பயணிகள் உடனடியாக இறங்கியதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் பெட்டியில் பற்றிய தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments