ஆறு மாதங்களில் ஆயிரக்கணக்கான ஆடுகளை திருடி, கார் வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண் உள்ளிட்ட 3 பேர் கைது..!

சென்னை பல்லாவரம் அருகே கடந்த 6 மாதங்களில் ஆயிரக்கணக்கான ஆடுகளை திருடி, கார் வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகல்கேணி ஆதம் நகரில் வசித்து வருபவர் சின்ன பொன்னன். இவர் ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார்.இந்தநிலையில் கடந்த மாதம் இவர் வளர்த்து வந்த 15 ஆடுகளையும் , மேய்சலுக்கு சென்று திரும்பிய 5 ஆடுகளையும் மர்ம நபர்கள் கார்களில் வந்து திருடி சென்றுள்ளனர்.
இதையடுத்து சின்னபொன்னன் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் சிசிடிவியை ஆய்வு செய்ததில் அனகாபுத்தூரில் உள்ள மெக்கானிக் கடையில் ஆடு திருடி சென்ற கார் நின்றிருந்த காரை போலீசார் விசாரித்த போது அனகாபுத்தூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது, மேலும் அவர் சரோஜினி என்பவருடன் இணைந்து ஆடுகளை திருடியதும் அவற்றை விருகம்பாக்கத்தில் உள்ள கறிக்கடைக்காரர் பரூக் என்பவரிடம் விற்று உல்லாச வாழ்க்கை வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
Comments