பக்தர்களுக்கு வழங்கப்படும் பாயசத்தில் ஏலக்காய் விதைகளைப் பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை..!

சபரிமலை பக்தர்களுக்கு வழங்கப்படும் பாயசம் பிரசாதத்தில் இனி ஏலக்காய் சேர்க்கப் போவதில்லை என்று தேவசம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை பிரசாதமாக வழங்கப்படும் அரவணப் பாயசத்தின் ஏலக்காய் விதைகளில் பூச்சிக்கொல்லி மருந்து வாடை வந்ததால் அது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது.
இதையடுத்து பூச்சிக் கொல்லி மருந்து கொண்ட ஏலக்காய் விதைகளுடன் பாயசத்தை பக்தர்களுக்கு வழங்கக்கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட தேவசம் வாரியம் அதிகாரிகள், பாயசம் தயாரிக்கும் இயந்திரங்கள் சுத்தம் செய்யப்படும் என்றும் வருங்காலத்தில் இயற்கை வேளாண் முறையிலான ஏலக்காய் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Comments