தாளவாடியில் மக்களை அச்சுறுத்தி வரும் கருப்பன் யானையை பிடிக்க 3 கும்கி யானைகள்..!

0 1434

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடியில் மக்களை அச்சுறுத்தி வரும் கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் 3 கும்கி யானைகள் ஈடுபட்டுள்ளன. 

ரங்கசாமி கோவில் பகுதியில் நடமாடும் கருப்பன் யானையை கண்காணிப்பதற்காக பொள்ளாச்சியில் இருந்து கபில்தேவ், முத்து என்ற 2 கும்கி யானைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரவழைக்கப்பட்டன.

இந்த நிலையில் கருப்பன் யானையை விரட்ட கூடுதலாக கும்கி கலீம் என்ற யானையும்  வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்த 3 கும்கி யானைகள் மூலம்  கருப்பன் யானையை பிடித்து மயக்க ஊசி செலுத்தி வேறு வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments