''தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் 25லட்சம் இளைஞர்களை உருவாக்க நடவடிக்கை..'' - அமைச்சர் மனோ தங்கராஜ்.!

உலக அளவில் தகவல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கக்கூடிய வகையில் 25 லட்சம் இளைஞர்களை உருவாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை தொடங்கி வைத்துப் பேசிய அவர், இந்த ஆண்டு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மென்பொருள் ஏற்றுமதியில் ,இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது என்றார்.
தமிழகத்தில் புதிய மென்பொருள் நிறுவனங்களை மூன்றாவது மற்றும் நான்காம் கட்ட நகரங்களுக்கு எடுத்து செல்ல அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
Comments