எஸ்.பி.பீ காலனி முருகன் கோவிலில் பஞ்சரத்ன கீர்த்தனை விழா..!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள எஸ்.பி.பீ. காலனி முருகன் கோவிலில் பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
சேலம் சங்கரதாஸ் மிருதங்கம் வாசிக்க, சேர்தலா சத்தியமூர்த்தி வயலின் வாசித்து, திருப்பூர், சேலம், சென்னிமலை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பாடகர்கள் பெருமாள் பற்றிய பஞ்சரத்ன கீர்த்தனை எனும் வாய்ப்பாட்டினை பாடினர்.
பின்னர் வளாகத்தில் அமைந்திருந்த முருகன் மற்றும் ராமர் உள்ளிட்ட கடவுள்களுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
Comments