பாரிஸில் பரபரப்பான ரயில் நிலையத்தில் மர்ம நபர் கத்திக் குத்து - 6 பேர் காயம்

0 605
பாரிஸில் பரபரப்பான ரயில் நிலையத்தில் மர்ம நபர் கத்திக் குத்து - 6 பேர் காயம்

பாரீஸில் உள்ள பரபரப்பான Gare du Nord ரயில் நிலையத்தில், ஒரு நபர், திடீரென கத்தியைக் கொண்டு தாக்கியதில் 6 பேர் காயமடைந்தனர்.

பாரீஸ், லண்டன் மற்றும் ஐரோப்பாவின் வடக்கு பகுதிகளை இணைக்கும் முக்கிய ரயில் நிலையமான, Gare du Nord நிலையத்தில் இன்று காலை பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர்.

அப்போது ஒரு நபர் திடீரென கத்தியால் அருகிலிருந்தோரை தாக்குவதைக் கண்ட போலீசார், உடனடியாக அந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, பயணிகளை காப்பாற்றினர்.

படுகாயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments