அமெரிக்காவில், நீச்சல் குளத்திற்குள் பாய்ந்த 'டெஸ்லா' கார்.. 4 வயது சிறுவன் உள்பட 3 பேர் பத்திரமாக மீட்பு..!

0 1657
அமெரிக்காவில், நீச்சல் குளத்திற்குள் பாய்ந்த 'டெஸ்லா' கார்.. 4 வயது சிறுவன் உள்பட 3 பேர் பத்திரமாக மீட்பு..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், கட்டுப்பாட்டை இழந்து நீச்சல் குளத்திற்குள் பாய்ந்த டெஸ்லா காரில் சிக்கிக்கொண்ட 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

காரை ஓட்டிவந்த நபர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலரேட்டரை மிதித்ததால் தறிகெட்டு ஓடிய டெஸ்லா கார், வீட்டின் சுவரை மோதி தள்ளிவிட்டு, உள்ளேயிருந்த நீச்சல் குளத்திற்குள் பாய்ந்தது.

சத்தம் கேட்டு அருகிலிருந்த அங்கன்வாடி மையத்திலிருந்து ஓடி வந்த இரு பணியாளர்கள், குளத்திற்குள் மூழ்கத்தொடங்கிய காருக்குள் சிக்கிக்கொண்ட 4 வயது சிறுவன் உள்பட 3 பேரை பத்திரமாக வெளியே மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments