சீனாவில் கொரோனா பரவல் திடீரென அதிகரிப்பு.. சிறிய நகரங்களில் கொரோனா மருந்துக்கு கடும் தட்டுப்பாடு..!

0 1298

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்ததால், அது தொடர்பான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உற்பத்தியை அதிகரிக்க, அங்குள்ள மருந்து நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க தொடங்கியுள்ளன.

மக்கள் போராட்டங்களை தொடர்ந்து, சீனாவில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் உடனடியாக தளர்த்தப்பட்டதால், தொற்று பரவல் வேகமெடுத்தது.

கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதுடன், சிறிய நகரங்களில் கொரோனா மருந்துக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

மேலும், கொரோனா மரணங்கள் அதிகரித்ததால், உடல்களை அடக்கம் செய்ய மயானங்களில் காத்திருக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments