திருடனால் கத்தியால் குத்தப்பட்ட காவலர் உயிரிழப்பு..!

0 1651

டெல்லியில் பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில் திருடனால் கத்தியால் குத்தப்பட்டு போலீஸ்காரர் உயிரிழந்தார்.

காவலரான 57 வயது ஷியாம்பு தயாள், ஜனவரி 4ம் தேதி மயாபுரியில் செல்போன் திருட்டு சம்பந்தமாக அனிஷ்ராஜ் என்பவனை விசாரணைக்காக அழைத்துச்சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது, மறைத்து வைத்திருந்த கத்தியை திடீரென எடுத்து, போலீஸ்காரரின் உடலில் 12 இடங்களில் அனிஷ்ராஜ் குத்தினான். அந்த காவலர் போராடிய நிலையில், பொதுமக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷியாம்பு 4 நாட்களுக்குப் பிறகு இறந்தார். தப்பியோடிய அனிஷ்ராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த டெல்லி காவல்துறை, ஷியாம்பு தயாளின் தீரத்தையும் பாராட்டி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments