ஆன்லைன் சூதாட்டத்தில் சிறுசிறு தொகைகளை வென்று பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை..!

0 1035

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே ஆன்லைன் ரம்மியை பதிவிறக்கம் செய்து விளையாடி, சிறுசிறு தொகையை வென்று வந்த இளைஞர், மேலும் பணம் வெல்லும் ஆசையில் பெரிய தொகையை வைத்து விளையாடி பணத்தை இழந்ததால், மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்த பட்டதாரியான சிவன்ராஜ், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, அதை திரும்பப் பெற உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி சூதாட்டத்தை தொடர்ந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்கட்கிழமை அன்று வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து கிடைத்த பணத்தில், ஒரு லட்சம் ரூபாயையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.

இதனால் மனமுடைந்து,  குளிர்பானத்தில் பூச்சிமருந்து குடித்து மயங்கி கிடந்த சிவன்ராஜ், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments