வீட்டிற்குள் புகுந்து பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள்..!

0 1203

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே வீட்டிற்குள் புகுந்து பெண்ணை வெட்டி கொலை செய்து விட்டு, வீட்டைச் சுற்றி மிளகாய் பொடியை தூவிச் சென்ற மர்ம நபர்களை தேவக்கோட்டை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

கண்ணங்கோட்டையை சேர்ந்த குமார்- வேலுமதி தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். குமார் மலேசியாவில் வேலை பார்த்து வரும் நிலையில், வேலுமதி தன் மகனுடன் அதே பகுதியில் உள்ள தனது தாய் கனகம் வீட்டில் வசித்து வந்தார்.

இன்று அதிகாலை கனகத்தின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வேலுமதியை அரிவாளால் சரமாரியாக வெட்டியதுடன், அதை தடுக்க வந்த அவரின் தாய் மற்றும் மகனையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்தினர் இன்று காலை இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்ததுடன், வெட்டுகாயங்களுடன் கிடந்த சிறுவனையும் மூதாட்டியையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறப்படுகிறது.

கொள்ளை நோக்கில் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தேவக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த வீட்டிற்கு மோப்ப நாயை அழைத்து வந்து கொலையாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments