“பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியா - அமெரிக்கா உறவு முக்கியத்துவம் வாய்ந்தது” - பாட் ரைடர்

0 1031

அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளுக்கு இணையாக, பாதுகாப்பு ஒத்துழைப்பில், இந்தியாவுடனான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய பென்டகன் செய்தி செயலாளர் பாட் ரைடர், அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு கூட்டாளிக்கான அந்தஸ்து இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், நெருங்கிய நட்பு நாடுகளுக்கு இணையாக இந்தியாவை, அமெரிக்கா கருதுவதாகவும் தெரிவித்தார்.

இதன்மூலம், நேட்டோ அமைப்பில் இல்லாத இந்தியாவுக்கு, மேம்பட்ட தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வதற்கும், பாதுகாப்பு வர்த்தகத்தை எளிதாக மேற்கொள்ளவும், பலப்படுத்தவும் அமெரிக்கா உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments