தனது முதல் மின்சார SUV காரை அறிமுகப்படுத்தியது மாருதி சுசுகி நிறுவனம்..!

0 4763

டெல்லியை அடுத்துள்ள நொய்டாவில் நடைபெற்றுவரும் ஆட்டோ எக்ஸ்போ  கண்காட்சியில் மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் மின்சார SUV காரை அறிமுகப்படுத்தியது.

3 ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு இன்று தொடங்கிய ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்ச்சி வருகின்ற 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது புதிய மாடல் கார்களை காட்சிபடுத்தியுள்ளன.

மாருதி சுசுகி அறிமுகப்படுத்திய இந்த SUV கார் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 550 கி.மீ தூரம் வரை செல்லும் எனவும், 2025-ம் ஆண்டு சந்தைக்கு விற்பனைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments