அடுத்த 25 ஆண்டுகளில் உலகளவில் இந்தியா தலைமை தாங்கும் - ஆளுநர் ஆர்என் ரவி

0 1417

திருவையாறு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 176ஆம் ஆண்டு ஆராதனை விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, பஞ்சரத்ன கீர்த்தனை வைபவத்தை தொடங்கி வைத்தார்.

நாட்டை, வராளி, ஆரபி, உள்ளிட்ட 5 ராகங்களில் கீர்த்தனைகளை பாடி இசை கலைஞர்கள் தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மேடையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்என் ரவி, இந்த நாடு எந்த ஒரு சர்வாதிகாரியாலும் உருவாக்கப்படவில்லை என்றார். ரிஷிகளாலும், கவிகளாலும் தான் நம் நாடு உருவாக்கப்பட்டுள்ளது. சனாதனம் தான் நம் பாரதத்தை தோற்றுவித்ததாக குறிப்பிட்டார்.

மேலும் உலகத்தின் கலங்கரை விளக்காக இந்தியா திகழ்வதாக தெரிவித்த ஆளுநர், அடுத்த 25 ஆண்டுகளில் நம் நாடு உலகளவில் தலைமை தாங்கும் நிலை உருவாகும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments