திருச்சி விமானநிலையத்தில் ஆண் பயணி ஒருவர் தோல் பையில் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்...!

திருச்சி விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 47 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்று மதியம் திருச்சியில் இருந்து துபாய் புறப்பட இருந்த ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆண் பயணி ஒருவர் தன்னிடம் உள்ள தோல் பையில் 41ஆயிரத்து 800 யூரோ நோட்டுகள், 50ஆயிரம் UAE திர்காம்ஸ் கரன்சிகளை மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது.அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments