அவ தீவைச்சிக்கிட்டா அவர் என்னம்மா செய்வார் ? உதவலன்னா மிரட்டுவீங்களா ? கொதிக்கும் விஜய் ரசிகர்கள்

0 20863

திருவள்ளூரில் பாலியல் தொல்லைக்குள்ளாகி, உடலில் தீவைத்துக்கொண்டு அவதிப்படும், விஜய் ரசிகையான சிறுமிக்கு உதவ மறுத்ததாக, நடிகர் விஜய் மீது குற்றஞ்சாட்டியுள்ள தமிழர் முன்னேற்றப் படை வீரலட்சுமி, விஜய்யை கண்டித்து உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தப் போவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டதாக கூறி தீவைத்துக் கொண்ட விஜய் ரசிகையான திருவள்ளூர் சிறுமி ஒருவர் நடிகர் விஜய்யிடம் உதவி கோரியிருந்தார்.

அந்த சிறுமிக்கு விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு உதவியும் செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் நடிகர் விஜய்யை கண்டித்து, தை 1 ந் தேதி நடிகர் சங்கத்தின் முன்பும் , விஜய் நடிக்கும் வாரிசு படம் ஓடக்கூடிய திரையரங்குகளின் முன்பும் விஜய் உருவ பொம்மையை எரிக்கப்போவதாக தமிழர் முன்னேற்ற படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்

வீரலெட்சுமியின் இந்த மிரட்டலுக்கு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments