இங்கிலாந்தில் இருந்து முதன்முறையாக ஏவப்பட்ட ராக்கெட் தோல்வி..!

0 2186

இங்கிலாந்தில் இருந்து முதன்முறையாக ஏவப்பட்ட ராக்கெட் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விர்ஜின் ஆர்பிட் நிறுவனத்தின் போயிங் 747 விமானத்தில் 70 அடி உயர ராக்கெட்டை பொருத்தி, அதிலிருந்து செயற்கைக்கோள்களை ஏவ, இங்கிலாந்து விண்வெளி முகமை திட்டமிட்டது.

அதன்படி, அந்நாட்டின் கார்ன்வலில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து ராக்கெட்டுடன் விமானம் புறப்பட்டது.

திட்டமிட்டபடி, 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து ராக்கெட் பிரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது.

எனினும், புவி வட்டப்பாதையில் ராக்கெட் திடீரென விலகிச்சென்றதாகவும், இதனால் திட்டம் தோல்வியடைந்ததாகவும் விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments