கர்நாடகா மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் தூண் சரிந்து விழுந்த விபத்தில் தாய்-மகன் உயிரிழப்பு..!

0 1030

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் நாகவரா பகுதியில் மெட்ரோ ரயில் பாதைக்கான தூண் சரிந்து விழுந்ததில் தாய்-மகன் உயிரிழந்தனர்.

கல்யாண் நகர் முதல் எச்.ஆர்.பி.ஆர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலத்துக்காக இரும்பு கம்பிகளைக் கொண்டு தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதில், ஒரு தூண் சரிந்து அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவி, அவர்களது இரட்டை குழந்தைகள் மீது விழுந்தது.

இந்த விபத்தில், ஹென்னூரைச் சேர்ந்த தேஜஸ்வினி, அவரது 2 வயது மகன் விகான் ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பொறியாளர் லோதிஷ்சும், அவரது மகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments