காரை ஓட்டிய இளைஞர், பெண் தோழியுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து..!

0 1457

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் அருகே, காரை ஓட்டியபடியே இளைஞர், பெண் தோழியுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்து காட்சி, சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

கருங்கல் பகுதியை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவர் பிஜு, தனது தோழியுடன் திங்கள்சந்தையிலிருந்து அழகிய மண்டபம் நோக்கி வந்தபோது, விபத்து நிகழ்ந்தது.

எதிரில் வந்த இருசக்கர வாகனம் மற்றும் நின்றிருந்த ஆட்டோ மீது கார் மோதியதில், தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி சோனி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் பிஜுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments