சட்டமன்றத்தில் திமுகவினர் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..!

ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக்கூடாது என்றும், அவரை தாக்கி பேசக்கூடாது என்றும் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது.
ஆளுநருக்கு எதிராக பேனர்கள், சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என, கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
எம்.எல்.ஏ.க்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை முன்வைத்து சட்டப்பேரவையில் பேச வேண்டும் என்றும், எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டாலும், அமைதி காக்க வேண்டும் எனவும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
Comments