இந்தியை கற்றுக்கொள்வது மாணவர்களுக்கு உதவும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியை கற்றுக்கொள்வது மாணவர்களுக்கு உதவும் - ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்தியாவில் அதிகம் பேசப்படும் இந்தியை கற்றுக்கொள்வது, மாணவர்களுக்கு பெரியளவில் உதவும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள உள்ளவர்களுடன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
அப்போது, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஆளுநர், நிர்வாக ரீதியாக மத்திய அரசை, ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை என்றும், ஆனால் அதை அரசியலாக்கும்போதுதான் பிரச்சனை எழுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், மத்திய அரசுப்பணி அதிகாரிகள், மத்திய அரசின் உத்தரவுப்படியே நடக்க வேண்டும் என தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிகாரிகள் அதிகாரிகளாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, சமூக ஆர்வலர்களாக மாற கூடாதெனவும் பேசினார்.
Comments